சுகாதாரப் பணியாளர்கள் கைரேகை வைத்து சேவைக்கு வருவதை மறுப்பது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளிடம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில்,
பணியாளர்களின் எதிர்ப்பினால் இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும், சுகாதார அமைச்சின் வளாகத்தில் விரைவில் கைரேகை இயந்திரங்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பொதுவான முறைமை ஊடாக அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும் ஊழல் அற்ற சேவையாகவும் மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் சுகாதார சேவையும் இணைந்து கொள்ள வேண்டுமென குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.
வைத்தியசாலை முகாமைத்துவம் மற்றும் பணியாளர்கள் முகாமைத்துவம் தொடர்பான கணக்காய்வு விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் உப குழு 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.