லுணுகம்வெஹெர வனப்பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளதுடன், 31 வயதான திஸ்ஸமஹாராமய பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி, துப்பக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
