அவசர கொள்வனவாக மருந்துகளை இறக்குமதி செய்வதில் இடம்பெறும் ஊழல்கள் காரணமாக வருடாந்தம் பெருமளவு பணம் விரயமாகுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஊழல் நடவடிக்கைகளினால் வருடாந்தம் முப்பது நாற்பது பில்லியன் ரூபா வீண் விரயமாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
அடுத்த வருடத்துக்கான மருந்து இறக்குமதிக்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், முறையான முறையின்படி மருந்துகளை இறக்குமதி செய்தால் இந்தத் தொகை செலவிடப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.