Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபானம் வாங்க சென்ற நபர் சடலமாக மீட்பு

மதுபானம் வாங்க சென்ற நபர் சடலமாக மீட்பு

தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானம் வாங்க சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போயிருந்த நிலையில், அதில் ஒருவரின் சடலம் நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த 51 ஒருவரே காணாமல் போயுள்ளார்.

இவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும், கடந்த 11 ஆம் திகதி மாலை ஆறு மணியளவில் மதுபானம் வாங்க சென்றதாகவும், அவர்கள் திரும்பி வராததால் அவர்களது உறவினர்கள் பொலிஸில் முறையிட்டனர்.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காணாமல்போனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles