வர்த்தக வங்கிகள் ஊடாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழில் கிடைத்த பின்னர் அவர்கள் மீள்செலுத்தக்கூடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெறாத மாணவர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு வழங்கப்படும் எனவும், அவர்களுக்கு விசேட பயிற்சியளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அனைவருக்கும் பாடசலைகளில் விசேட ஆங்கிலக்கல்வி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், மாணவர்களுக்கு மீண்டும் சுரக்ஷா காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.