Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐஸுடன் பொலிஸ் பரிசோதகர் கைது

ஐஸுடன் பொலிஸ் பரிசோதகர் கைது

ஐஸ் ரக போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செயயப்பட்டுள்ளார்.

நிலாவெளி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

குறித்த பொலிஸ் உப பரிசோதகர் நேற்றைய தினம், பொலிஸ் நிலையத்திலிருந்து தமது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது, அலஸ்தோட்டப்பகுதியில் வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடம் இருந்த 25 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகர் மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கைதானவர் 33 வயதுடையவர் என்பதுடன், அவர் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles