Thursday, February 12, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைதான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கைதான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ரம்புக்கனை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் காவல்துறை சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று காவல்துறை கான்ஸ்டபிள்கள் நேற்று இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ரம்புக்கனையில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதிவான் காவல்துறைமா அதிபருக்கு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles