ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தை தீவிரமாக உருவாக்கி வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப்ப பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி குடிமக்கள் இனி ஒரு சார்பு மக்களாகக் கருதப்படாமல், சமமான குடிமக்களாகக் கருதப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.