Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்விளையாட்டுகோலியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த குதிரை

கோலியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த குதிரை

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் 35வது பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி தனது 49வது ஒருநாள் சதத்தை பெற்றுக் கொண்டதும், இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியதும் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாக்கியது.

பெங்கால் கிரிக்கெட் சங்கம் (CAB) இந்த மூன்று சிறப்பு நிகழ்வுகளையும் கொண்டாட விரும்பியதால், ஈடன் கார்டன் மைதானத்திற்கு வெளியே வானவேடிக்கை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு தொடங்கிய வான வேடிக்கை நிகழ்ச்சி மிக அழகாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஈடன் கார்டன் மைதானத்திற்கு வெளியே வான வேடிக்கையின் போது நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததால் கொல்கத்தா மவுண்டட் பொலிஸின் குதிரை ஒன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே பணியில் இருந்தபோதே குறித்த குதிரை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அப்போது அனிமேஷ் சக்ரவர்த்தி என்ற பொலிஸ் சாரதியுடன் தங்கியிருந்த இந்த குதிரை உயிரிழந்த போது அதன் வயது 5 வருடங்களும் 10 மாதங்கள் ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles