Thursday, September 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க தனி அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க தனி அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக தனியான அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையில் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் இந்த முன்னோடித் திட்டத்தில் 10 மாவட்டங்களில் இருந்து 500 மாற்றுத்திறனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles