வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரில் பிரபல உள்ளூர் துணை நடிகரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வாங்கி தருவதாக உறுதியளித்து பொதுமக்களிடமிருந்து சந்தேக நபர்கள் 500,000 ரூபா முதல் 2 மில்லியன் ரூபா வரை பணத்தை பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்கள் பாணந்துறை வலன பொலிஸ் ஊழல் ஒழிப்பு செயலணியின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துணை நடிகர் பல ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளதாகவும், அந்த அமைப்புகளால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டைகளை வைத்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கணினியில் உருவாக்கப்பட்ட போலி இத்தாலி விசா மற்றும் விமான டிக்கெட்டுகளை காட்டி பொதுமக்களை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
துணை நடிகர் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டதாகவும், ஏனைய இருவரும் அவருக்கு உடந்தையாக செயற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.