Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சரித் அசலன்க 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் தன்சிம் ஹசன் சாகிப் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில், அதிகபடியாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles