இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் வலுபெற்றுள்ளதையடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று காலை இந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய குழு, கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளிடம் மனுவொன்றையும் கையளித்தது.
இலங்கை அணி அண்மைக்காலமாக பங்குபற்றிய போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை அணி மீது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், அணியின் முன்னாள் வீரர்களும் தேர்வாளர்கள் உட்பட கட்டுப்பாட்டுச் சபைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.