இந்தியாவில் ராஜஸ்தானில் 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹரித்வாரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 04 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 34 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் தௌசா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், இரு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.