வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மையம் பலத்த மின்னல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்குஇ சப்ரகமுவஇ மத்தியஇ ஊவாஇ வடக்குஇ வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழையையும் எதிர்பார்க்கலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.