11 இலங்கையர்கள் ரஃபா எல்லைக் கடவை மூலமாக காசாவிலிருந்து வெளியேறி எகிப்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், பலத்த காயங்களுக்குள்ளானவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற ரஃபா எல்லை கடவை இரண்டாவது நாளாக தொடர்ந்தும் திறக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த இலங்கையர்கள் குழு காசாவை விட்டு வெளியேறியுள்ளது.
முன்னதாக 17 இலங்கையர்கள் காசாவை விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தனர்.
எனினும் 11 இலங்கையர்கள் மாத்திரமே ரஃபா எல்லைக் கடவையைப் பயன்படுத்தி எகிப்துக்குள் நுழைய முடிந்தாக தெரிவிக்கப்படுகிறது.