லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது நாளை முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.