‘OnmaxDT’ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் ஐவர் மோசடியான பிரமிட் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர்களை இன்றை தினம் புதுக்கடை, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் 24 அன்று, இலங்கை மத்திய வங்கி (CBSL) நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்திய ‘OnmaxDT’ உட்பட 9 நிறுவனங்களுக்கு தடை விதித்தது.
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நடத்துதல், நிதியளித்தல், நிர்வகித்தல் அல்லது வழிநடத்துதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.