Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுVAT வரியை விருப்பத்திற்காக அதிகரிக்கவில்லை - ஜனாதிபதி

VAT வரியை விருப்பத்திற்காக அதிகரிக்கவில்லை – ஜனாதிபதி

VAT வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கான தீர்மானம் தானோ அல்லது அமைச்சரவையின் விருப்பத்திற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் நடத்திய விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் சிலர் முறைப்பாடு செய்வதாகவும், அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இந்த தீர்மானத்தை எடுக்கவில்லையென்றால் நாடு கடந்த வருடத்தில் இருந்த நிலைக்கு திரும்புவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலை நெருங்கும் எந்தவொரு அரசாங்கமும் அல்லது நாடாளுமன்றமும் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பது கடினமான காரியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles