இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் போது இந்த உதவி வழங்கப்பட்டது.
அது தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான இருதரப்பு ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.