அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு இன்று (02) முதல் 30% சலுகை விலையில் பாடசாலை பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
குறித்த புத்தகங்களை மேற்படி கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகம் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்தார்.