Thursday, January 16, 2025
26 C
Colombo
மலையகம்உடல் சிதைவடைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

உடல் சிதைவடைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இராகலை ஹரஸ்பெத்த பகுதியை சேர்ந்த மலிந்த தில்ஷான் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது வீட்டில் பெற்றோரை தாக்கி சண்டையிட்டு, நான் எங்காவது போய் எனது உயிரை மாய்த்துகொள்வேன் எனவும் எனது சடலம் கூட உங்களுக்கு கிடைக்காது என கூறிவிட்டு நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகன் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (02) மாலை இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று தர்பனா எல மலை அடிவாரத்தில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இத்தகவலை பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பின் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை பொலிஸார் அங்கு உடல் பாகங்கள் சிதைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேநேரத்தில் உயிரிழந்திருப்பதாக தனது மகன் என பெற்றோரும் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles