5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
வரி மிகுதியை செலுத்த தவறியமைக்காகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மதுவரி ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க, குறித் நிறுவனங்களின் மதுபான உற்பத்தி விநியோகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டதாக கூறினார்.
நீண்டகாலமாக நிலுவைத் தொகையை செலுத்தாத நிறுவனங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரம் ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் காலாவதியாகியிருந்தன.
எனினும் அவற்றின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.