Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண திருத்தம்: மக்களின் கருத்தை கோர நடவடிக்கை

மின் கட்டண திருத்தம்: மக்களின் கருத்தை கோர நடவடிக்கை

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரல் நடத்தப்படவுள்ளது.

இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை அண்மையில் கேட்டறிந்ததாக ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர் மின் பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது.

இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்துக்கு 53 ரூபாவை செலவழித்த போதிலும், நுகர்வோர் ஒருவருக்கு 16 ரூபாவே அறவிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த 8 வருடங்களாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles