நெடுஞ்சாலையில் நுழைந்த பிறகு எந்த வாகனமும் நிறுத்த முடியாது என்பது விதிமுறையாகும்.
ஆனால் கடந்த 30ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாகும்புரவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இந்த விதியை மீறும் காணொளியொன்று தற்போது வைரலாகி வருகிறது.
பேருந்தின் சாரதி தொலைபேசியில் பேசிக்கொண்டே ஓட்டுவது மட்டுமல்லாமல், நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் முன் ஒரு பயணியை இறக்கிவிடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.