Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறிய - நடுத்தர தொழில்துறையினருக்கு வங்கிக் கடன் சலுகைகள் வழங்கப்படும்

சிறிய – நடுத்தர தொழில்துறையினருக்கு வங்கிக் கடன் சலுகைகள் வழங்கப்படும்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்துறை சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உண்மையான தலைமைத்துவம் என்பது மக்களுடன் நேர்மையாக இருத்தல் மற்றும் நாட்டுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களை எடுப்பது என்பனவற்றைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் உள்ள இளைஞர் தலைமைத்துவம் மற்றும் நாட்டுக்காக உழைக்கும் இளம் அமைச்சர்கள் குழுவின் மீது ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த அவர்களுடன் ஒத்துழைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

மேலும், இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருக்கான வங்கிக் கடன் சலுகைகளை நிவர்த்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய கைத்தொழில் சிறப்பு விருதுகள் 2023, இந்த இலக்கை அடைவதற்கான ஒரு படியாகும்.

இச்சூழலில், 21 பாரிய தொழில் துறைகளிலும், 61 துணைத் தொழில் துறைகளிலும் போட்டியிட விண்ணப்பித்த 4,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களில் 300 வெற்றிகரமான தொழில்முனைவோர் அங்கீகரிக்கப்பட்டு, பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

Keep exploring...

Related Articles