பொலன்னறுவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பொது கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.