இந்தோனேசியாவின் திமோர் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, திமோர்-லெஸ்டேவில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.