150 ரயில் சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சில சாரதிகள் விடுமுறை எடுக்காமல் தமது கடமைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய புகையிரத சாரதிகள் நியமனம் செய்யப்பட்டாலும், அவர்களை சரியான சாரதியாக நியமிக்க சுமார் 4 வருடங்கள் தேவைப்படுவதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.