நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதிக் குறைப்பு, வரி அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.