எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்குமானால், அதனை திருத்தியமைக்க வேண்டியிருக்கும் என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.