தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிகார சபையின் பணிப்பாளர் சபை இன்று(31) கூடிய போதே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையை கூட்டுவதற்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன நடவடிக்கை எடுத்திருந்தார்.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல், தரமற்ற மருந்துகளை பயன்படுத்துதல் மற்றும் தரவுகளை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மீது அண்மைக் காலமாக முன்வைக்கப்பட்டன. சுகாதாரத் துறையில் இவ்வாறானதொரு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி அண்மையில் புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமித்தார்.
இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.