ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகளை வழங்குவதற்கான விலைமனுக்கள் இன்று (31) கோரப்படும் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த விலைமனுக்களை வழங்குவதற்கு இன்று முதல் 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும்.
விலைமனுக்கள் கோரப்படும் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் அதற்கான நிறுவனங்களை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.