Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 மாதங்களுக்கு ஒரு தடவை மின் கட்டணத்தை திருத்த அனுமதி

3 மாதங்களுக்கு ஒரு தடவை மின் கட்டணத்தை திருத்த அனுமதி

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது காணப்படுகின்ற பொதுக் கொள்கை வழிக்காட்டல்களுக்கமைய மின் கட்டணத் திருத்தத்திற்கான திருத்த காலப் பகுதி 6 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதனால் பொது மக்கள் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சிரமங்களை கருத்திற் கொண்டு குறித்த திருத்த காலப் பகுதியினை 03 மாதங்களாக மாற்றியமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிபாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான யோசனையினை சமர்ப்பித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles