அப்புத்தளையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.
இதில் கலந்து கொள்ள சென்றிருந்த தங்கமலை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றதாகவும், பின்னர் வீதியோரமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இறப்பதற்கு முன்னர் அங்கிருந்த சிலரிடம் அவர் குடிப்பதற்கு நீரை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.