தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தலா நான்கு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் வினாடிக்கு 14,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தெதுரு ஓயாவை அண்மித்த, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் சிறு வெள்ளம் தொடர்பான எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த மத்திய முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.