2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 30 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
புனேவில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 02 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 2 முறை மோதியுள்ளன.
குறித்த 02 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.