ரிட்டிகல பகுதியில் விவசாய கிணற்றுக்குள் விழுந்த 4 காட்டு யானைகள் பல மணிநேர போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டன.
ரிட்டிகல – கனேவல்பொல – மொரகொட மற்றும் அலகொல்லேவ வனஜீவராசிகள் காரியாலங்களின் அதிகாரிகள் இணைந்து குறித்த யானைகளை மீட்டுள்ளனர்.
இரண்டு தாய் யானைகளும், இரண்டு குட்டிகளுமே இவ்வாறு கிணற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 4 யானைகளும் பின்னர் கும்புக்வெவ வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உணவு தேடி ஊருக்குள் பிரவேசித்த யானைகளே இவ்வாறு பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.