பிரேசிலின் அக்ரே மாநிலத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒற்றை எஞ்சின் விமானமொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின்போது விமானத்தில் ஒரு சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன், இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணங்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.