நாடளாவிய ரீதியில் அரச ஊழியர்கள் இன்று (30) போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரச சேவைகள் உட்பட பல சேவைகள் இதில் ஈடுபட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று பகல் 12 மணிக்கு மதிய உணவு வேளையில் இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதிக்கு பின்னர் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச தொழிற்சங்க சம்மேளனத்தின் மாகாண மாநில பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்தார்.