இஸ்தான்புல் – கொழும்புக்கு இடையே நேரடி விமான சேவைகளை துருக்கி ஏர்லைன்ஸ் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த சேவையானது எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், வாரத்தில் நான்கு தினங்கள் குறித்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.
அதன்படி, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் விமான சேவைகள் இடம்பெறும்.
இந்த தகவலை இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.