குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (26) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தலுக்காக 10 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின், டிஜிட்டல் தராசு மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்தாக கருதப்படும் 9,200 ரூபா பணம் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.