Friday, April 18, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிள்ளையை பணயக்கைதியாக வைத்து தாயை வன்புணர்ந்த இளைஞர்கள் கைது

பிள்ளையை பணயக்கைதியாக வைத்து தாயை வன்புணர்ந்த இளைஞர்கள் கைது

கம்பஹா – பூகொட – அம்பகஹவத்த பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பணயக்கைதியாக வைத்து தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கணவர் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தனது ஒரு வயது 4 மாத பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போது மூன்று இளைஞர்கள் வீட்டிற்குள் நுழைந்து அவரை வன்புணர்வு செய்துள்ளனர்.

அவர்கள் மூவரும் குழந்தையை பணயக்கைதியாக வைத்து தாயை மிரட்டி வன்புணர்வு செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞரை தேடி விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles