பேருந்து சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளை அறிவிக்க கைப்பேசி செயலியொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் தொடர்பில் எந்தவொரு நபரும் இந்த செயலியின் ஊடாக நேரடியாக தகவல்களை சமர்ப்பிக்க முடியும் என இபோச விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், பயணிகளைத் துன்புறுத்தும் சாரதி அல்லது உதவியாளரின் நடத்தை, பேருந்து சாரதிகளின் தாக்குதல்கள் மற்றும் வாக்குவாதங்கள் தொடர்பாகவும் முறைப்பாடு செய்யலாம்.
குறித்த செயலி மூலம் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களையும் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது.