அதிபர்கள் அல்லது பாடசாலைகளுக்கு மாதாந்தம் 5,000 ரூபாவை பொழுதுபோக்கிற்கான கொடுப்பனவாக வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் சேவையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
கடமைச் சலுகையில் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முன்னர் வழங்கப்பட்ட விலக்கு மீண்டும் அதிபர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர்களின் கடமைத் தேவைகள் காரணமாக அவர்களின் பயணச் செலவுகள் முழுமையாகத் திருப்பியளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்காக செலவிடப்படும் பணத்தில் 50 சதவீதத்தை மீள வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதிலும் அதிபர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் சம்பள மட்டங்களுக்கு மேலதிகமாக அதிபர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என குழு தனது பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.