பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரச ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார்.
இம்ரானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்ததால் பிரதமர் பதவியை இழந்தார்.
தன்னை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் அமெரிக்காவுடன் இணைந்து சதி செய்ததாக இம்ரான் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே பரிமாறப்பட்ட ரகசிய ராஜதந்திர கடிதமும் பகிரங்கப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தின் அடிப்படையில் இம்ரான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.