செய்திகள்வணிகம்வட்டி வீதங்களை குறைக்காத வங்கிகளுக்கு எச்சரிக்கை

வட்டி வீதங்களை குறைக்காத வங்கிகளுக்கு எச்சரிக்கை

வங்கி வட்டி வீதங்களை இதுவரை குறைக்காத வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதனாம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளது.

அதனால் அனைத்து அரச, தனியார் வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் மேற்படி சுற்றறிக்கைக்கு இணங்க வேண்டும்.

சுற்றறிக்கைக்கு இணங்கத் தவறிய அனைத்து வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்களை மத்திய வங்கி தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles