Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு

கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் வாகனம் ஒன்றின் மீது இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

வாகனத்தில் வந்த இரு நபர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட முயற்சித்துள்ளனர்.

இதன்போதே அதிகாரிகள் வாகனத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles