உலக சாதனை நிகழ்த்துவதற்காகவும், நாட்டில் இறந்த தியாகிகளை நினைவு கூருவதற்காகவும், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும், 3089 கிலோமீற்றர் நடை பயணம் மூலம் கடந்து செல்லும் முயற்சியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
காலி அக்குரெஸ்ஸ பேருந்து நிலைத்திலிருந்து செப்டெம்பர் 25 ஆம் திகதியன்று காலை 7.30க்கு சுப்பிரமணியன் பாலகுமார் என்பவர் இந்த நடை பயணத்தை ஆரம்பித்ததுடன், கடந்த 22 ஆம் திகதி காங்கேசன்துறையை வந்தடைந்தார்.
பின்னர் அங்கிருந்து நேற்றையதினம் கரையோரமாக வல்வெட்டித்துறை பருத்தித்துறை ஊடாக நடை பயணத்தை தொடர்ந்து பருத்தித்துறை கொடிகாமம் வரை நடை பயணத்தை தொடர்கிறார்.