Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி யானை பலி

ரயில் மோதி யானை பலி

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் பாதையின் மின்னேரியா, ரொட்டவெவ சந்தியில் 146வது ரயில் மைல்கட்டுக்கு அருகில் ரயிலுடன் மோதி காட்டு யானை உயிரிழந்துள்ளது.

இன்று (24) அதிகாலை கொலன்னாவிலிருந்து மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன் இந்த காட்டு யானை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

30 வயதுடைய எட்டரை அடி உயரம் கொண்ட இந்த காட்டு யானை மின்னேரிய தேசிய பூங்காவில் இருந்து உணவு தேடி திரும்பும் போது இவ்விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரயிலில் மோதிய காட்டு யானை சுமார் பத்து மீற்றர் முன்னோக்கி இழுக்கப்பட்டு வீதியை விட்டு தூக்கி வீசப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து குறித்து வனவிலங்கு அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles